நாம் தமிழர் கட்சியால் தற்போது வரையில் வெற்றிக்கு அருகில்கூட போகமுடியவில்லை. பா.ஜ.க ஒரு கூட்டணியை அமைத்தற்கு காரணம் `மாற்று அரசியல்’ அல்ல. வேறு வழியில்லாமல் கூட்டணி அமைத்தார்கள். மேலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கலாம் என பா.ஜ.க-வின் குமுறல் சத்தம் கேட்க தொடங்கியிருப்பதை பார்த்தால் திராவிட எதிர்ப்பு செல்லாது என பா.ஜ.க-வினரே ஒப்புக் கொள்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும்.
தேசிய கட்சி என்ற முறையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கணிசமான வாக்குகள் வாங்கியிருக்கலாம். ஆனால் சட்டமன்ற தேர்தலிலும் இதேபோக்கு தொடரும் என்று சொல்லிவிட முடியாது. 2014-ல் கூட்டணியமைத்து 18.8 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க 2016-ல் தனித்து போட்டிடியிட்டு வெறும் 2.8 சதவீதத்தை தான் பெற்றது” என்றனர்.
இந்த விவாதம் தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், “தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து நின்ற மாற்று அணிகள் பெரிதாக எடுபட்டதில்லை என்பது நிதர்சனம்தான். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியின் வாக்கு அதிகரித்தது பெரிய விஷயம் அல்ல. ஆனால், இந்த தேர்தலுக்குமுன் மாநில கட்சியாக கூட அங்கீகாரம் பெறாத நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் இவ்வளவு வாக்குகள் பெற்றதை சாதாரணமாக பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க இருக்கும் அணியால் வெற்றிபெற முடியாது என்ற பேச்சு இருந்த சூழலில் 11 இடங்களில் அ.தி.மு.க-வையே பின்னுக்கு தள்ளியிருப்பதையும் புறந்தள்ள முடியாது. கூடுதலாக, வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தி.மு.க ஆகிய கட்சிகளை எதிர்த்துதான் நடிகர் விஜய்யும் கட்சியை நகர்த்தப் போகிறார். எனவே துளிர்விட்டிருக்கும் மாற்றணிகளின் வளர்ச்சி மேலும் வளருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88