மத்தியில் ஜே.டி.யூ – டி.டி.பி உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணிகளில் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது பா.ஜ.க. அதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று பீகாரின் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், பிரதமரின் பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக, என்.டி.ஏ நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு நிதீஷ் குமார் வணங்கியதைக் குறிப்பிட்டு, “ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பது அந்த மாநில மக்களின் பிரதிநிதி. ஆனால், நிதீஷ் குமார், சுயலாபத்துக்காக மோடியின் பாதங்களைத் தொட்டு பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நிதிஷ் குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
![பிரஷாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்](https://gumlet.vikatan.com/vikatan%2F2022-05%2F45c0e7d6-c272-4e94-8dfa-9742e6fa3cc1%2F6275205b72bed.webp?auto=format%2Ccompress)
![பிரஷாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்](https://gumlet.vikatan.com/vikatan%2F2022-05%2F45c0e7d6-c272-4e94-8dfa-9742e6fa3cc1%2F6275205b72bed.webp?auto=format%2Ccompress&w=1200)
அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சி விற்பனைக்கு வைக்கப்படவில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். மாநிலத்திற்கான நலன்களை உறுதிப்படுத்த தனது செல்வாக்கை பயன்படுத்தாமல், 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பா.ஜ.க ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர பிரதமரின் கால்களைத் தொடுகிறார்.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88