கேரளா: பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவர்னர்… ஆரிஃப் முஹம்மதுகானின் பதவிகாலத்தை நீட்டிக்க திட்டம்?!

கேரள மாநில கவர்னராக ஆரிப் முகமதுகான் பதவி வகித்து வருகிறார். இவர், ஆளுநராக 5 ஆண்டு காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் கேரள மாநில கவர்னர் நியமனம் குறித்து டெல்லி பா.ஜ.க தலைவர்கள் சில ரிப்போர்ட்களை கேட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகம்மதுகான் பல்கலைகழகங்க நியமனங்களில் கறார்காட்டி கேரள சி.பி.எம் அரசுக்கு டென்சன் ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாது பிரஸ்மீட் நடத்தி முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்ச்சித்து அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பினார்.

மேலும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிடப்பில் போட்டதுடன், மாநில அரசை கோபப்படுத்தும் விதமாக சில கோப்புகளை ஜனாதிபதிக்கு அனுப்பினார். கேரளா அரசு கவர்னருக்கு எதிராக கோர்ட் வாசலை தட்டும் நிலையை ஏற்படுத்தினார் கவர்னர் ஆரிப் முஹம்மதுகான். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில அரசுக்கு எதிரான கவர்னரின் சில செயல்பாடுகள் முக்கிய செய்தியாக இடம்பிடித்தன.

கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகான் சாலை ஓரத்தில் அமர்ந்து போராடிய நிகழ்வு

சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் காரில் செல்லும்போது கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திவந்தனர். அந்த சமயத்தில் கவர்னர் காரில் இருந்து இறங்கி மாணவர் அமைப்பினரை நெருங்கிச் சென்றதும், சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டார். எதிர்கட்சி தலைவர் போன்று கவர்னர் செயல்படுகிறார் என விமர்சனம் எழும் அளவுக்கு ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாடுகள் இருந்தன.

கவர்னர் அரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

இஸ்லாமியராக இருந்தபோதும், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு இருமுடி கட்டி மகனுடன் சென்று தரிசனம் செய்தார். கேரள மாநிலத்தில் பா.ஜ.க வளர்வதற்கான சில செயல்பாடுகளில் கவர்னர் ஆரிப் முகமதுகான் செயல்பட்டதாகவும், அதனால்தான் கேரளாவில் பா.ஜ.க காலூன்றியதுடன், வாக்கு சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக டெல்லி பா.ஜ.க-வினர் கருதுகின்றனர்.

எனவே கேரள கவர்னராக ஆரிப் முகம்மதுகானுக்கு பதவி நீட்டிப்பு செய்ய டெல்லி பா.ஜ.க தலைமை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துடன் 5 ஆண்டுகாலம் முடிவடைய உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே, மத்திய அரசின் வோண்டுகோளின்படி, ஆரிப் முஹம்மதுகானின் பதவிகாலத்தை நீட்டித்து ஜனாதிபதி உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *