அதன் எதிரொலியாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவுகளை யார் ஏற்பது என்பதில் எடப்பாடிக்கும், எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது. மாவட்டச் செயலாளர்கள்தான் செலவுகளைப் பார்க்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பும், முதல்வராக இருந்தவர்தான் செலவை ஏற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தரப்பும் போட்டிப் போட்டதால்தான், பல தொகுதிகளில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதுதான் நடந்தது. அது தொடர்பாக ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், `தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்திப்பது கட்சிக்கு நல்லது கிடையாது. அதனால் அம்மா வழியில் இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிடலாம்’ என்றார் எடப்பாடி.
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த மாவட்டத்தின் மாஜி அமைச்சர், `இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டே ஆக வேண்டும்” என்றார். உடனே, `வேட்பாளர் யார் என்பதை மாவட்டச் செயலாளரே கூறட்டும்’ என்றார் எடப்பாடி. அதற்கு, `வேட்பாளர் யார் என்பதை கூறுவதில் பிரச்னை இல்லை. ஆனால் தேர்தல் செலவுகளை யார் பார்ப்பது?’ என்று கேள்வி எழுப்பினார், மாஜி அமைச்சர். அப்போது, `மாவட்டச் செயலாளர்கள்தான் தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூற, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் அந்த மாஜி. தொடர்ந்து, `முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மட்டும் நீங்கள். செலவு செய்வதற்கு மட்டும் நாங்களா?’ என்று மற்ற மாவட்டச் செயலாளர்களும் அந்த மாஜி அமைச்சருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுதான் நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்க காரணம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb