நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க-வை வீழ்ந்த வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்று ஆம் ஆத்மி கட்சி. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சியாக பா.ஜ.க-வை தோற்கடிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு காங்கிரஸுடன் கூட்டணி வைத்தோம்.
இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெறும் என்பதால் ஜூன் 4-ம் தேதி ஒரு பெரிய ஆச்சரியம் இருக்கும். தற்போதைக்கு பா.ஜ.க-வை தோற்கடிப்பதும், தற்போதைய ஆட்சியின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் தான் எங்களின் நோக்கம். இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் சமரசம் செய்து கொண்டோம். காங்கிரஸுடன் நிரந்தர கூட்டணி என்பது கிடையாது.
பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதில், 13 இடங்களை வெல்வோம் என்று உணர்கிறேன். அதைத்தான் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால், கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். தொடர்ந்து இங்குப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத் தரத்தை உயர்த்துவது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதனால் 13 இடங்களிலும் வெற்றி பெறுவோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைய வேண்டும்.
இந்த நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது… பா.ஜ.க விரும்பும் வரை என்னைச் சிறையில் அடைக்கட்டும். நான் பயந்திட மாட்டேன். நான் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. அதனால்தான் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். ஜூன் 2-ம் தேதி சிறைக்குச் செல்ல நான் தயாராக இருக்கிறேன். எனது நாட்டைக் காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88