கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்றத்தின் பொது கேலரியில் இரண்டு பேர் குதித்து, வண்ண வாயுவை வெளியேற்றிய சம்பவம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பாராளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை PSS மற்றும் டெல்லி காவல்துறையிடம் இருந்து எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தி.மு.க அயலக அணிச் செயலாளராகவும் இருக்கும் எம்.எம்.அப்துல்லா, தான் நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.