அவர்களை சரத் பவார் கட்சிக்கு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய சரத் பவாரிடம் அஜித் பவார் மீண்டும் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத் பவார், “‘அனைவருக்கும் வீட்டில் இடமுண்டு. ஆனால் கட்சியை பொறுத்தவரை நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. என்னுடன் இருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்”என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அஜித் பவார் ஆதரவாளர்கள் அணி மாறி இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. புனேயில் தான் அஜித் பவாருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதினார். ஆனால் அதற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சரத் பவார் அளித்திருந்த பேட்டியில், ”கட்சியை பலவீனப்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்களை மீண்டும் கட்சிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாத தலைவர்களை ஏற்றுக்கொள்வோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Related Posts
SBI, PNB வங்கிகளுக்கு எதிராக கர்நாடக அரசின் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?! | karnataka government suspends all transactions with sbi and pnb
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், பல கோடி ரூபாய் இன்னும் இந்த வங்கிகளிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது என்றும் கர்நாடகா அரசு கூறியிருக்கிறது. ஏற்கெனவே, பழங்குடி மக்களுக்கான…
US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்… இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!
வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதகளமாகியிருக்கிறது, அமெரிக்க அரசியல் களம். இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம்…
ரஷ்யாவை திருப்பி அடிக்கும் உக்ரைன்… முன்னேறுகிறதா உக்ரைன் ராணுவம்?! – என்ன நடக்கிறது?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஆண்டுகள் கடந்து போர் நீடித்துவருகிறது. ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன், தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய இலக்குகளைக்…