அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே – அனல் தகிக்கும் இலங்கை அரசியல் களம் | Mahinda Rajapaksa‘s son Namal Rajapaksa will contest in presiden election in Srilanka

‘இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் எளிதாக வெற்றிபெற்றுவிட முடியாது என்பதுதான் கள யதாத்தமாக இருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்களில் எல்லோருக்குமே பல சவால்கள் இருக்கின்றன. ஒருவர்கூட 50 சதவிகித வாக்குகளைப் பெற முடியாது’ என்கிறார்கள் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர்.

‘அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப்போகிறேன்’ என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்தவுடன், எஸ்.எல்.பி.பி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் பலர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், எஸ்.எல்.பி.பி கட்சியின் இளம் எம்.பி-க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், இப்போது நமல் ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த இளம் எம்.பி-க்கள் நமல் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் என்றும் நமல் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *