ஆகஸ்ட் 16 ஆம் தேதி திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாக எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் செப்டம்பர் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே நாளில் அதிமுக அவசர செய்றகுழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
.
- First Published :