தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், நேற்று பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது, இவருக்குகான கூடுதல் சிறப்பு. விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆட்சியர் பிரியங்காவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தஞ்சாவூர், விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட பகுதி என்பதால், இங்கு ஏற்கெனவே பணியிலிருந்த ஆட்சியர்கள் ஏகப்பட்ட சவால்களை சந்தித்தனர். அதுபோல் பிரியங்கா முன்பும் ஏகப்பட்ட சவால்கள் வரிசை கட்டி நிற்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், ஆட்சியர் பிரியங்காவை டெல்டாவின் மகள் என விவசாயிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகின்றனர். காவிரியின் மடியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் வலிகள், துயரங்களை உணர்ந்திருப்பவர். எனவே, விவசாயப் பிரச்னைகளில் தனி கவனம் செலுத்தி சாதுரியமாகக் கையாண்டு சவால்களை சமாளிப்பார் என்கிற எதிர்பார்ப்பு பிரியங்கா மீது எழுந்துள்ளது. அதற்கேற்றாற்போல் பதவியேற்றதும் ஆட்சியர் பிரியங்கா, `விவசாயத்துக்கும், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன், அனைத்து அதிகாரிகளும் சிரித்த முகத்துடன் பணி செய்ய வேண்டும்.