அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் படித்து, 7.5 சதவிகித முன்னுரிமையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பொறியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவ – மாணவிகளிடமிருந்து அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்படுவதாகவும், எனவே, கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டணங்களை பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கண்டிப்பாக வசூலிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
.
- First Published :