இனி நோ `குட் மார்னிங்’… ஒன்லி `ஜெய்ஹிந்த்'… ஹரியானா பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை!

ஹரியானா மாநில பள்ளி கல்வித்துறை, வரும் ஆகஸ்ட் 15 முதல் பள்ளிகளில் `குட் மார்னிங்’ என்பதற்குப் பதில், `ஜெய்ஹிந்த்’ என்று கூறவேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் தேசியப் பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

School

மேலும், இந்த முயற்சியானது பலதரப்பட்ட மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்றும், சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மாநில கல்வியமைச்சர் சீமா த்ரிகா, “ஜெய் ஹிந்த் என்று கூறுவதன் மூலம், நமது எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களை மாணவர்கள் நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறோம். ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதன் மூலம், நமது மாணவர்கள் இயல்பாகவே ஒழுக்கமுடையவர்களாக மாறுவார்கள். மேலும், ‘ஜெய் ஹிந்த்’ என்பது தேசபக்தி உணர்வைத் தூண்டும்.

இந்திய தேசியக் கொடி

அதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை உருவாக்க வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் அனைத்து அரசு ஊழியர்களும் நமது ஆயுதப் படைகளைப் போலவே மற்ற வணக்கங்களுக்குப் பதிலாக `ஜெய் ஹிந்த்’ என்று கூறத் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்,

இந்த ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் முதன்முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த செண்பகராமன் என்ற சுதந்திரப் போராட்ட வீரரால் முழங்கப்பட்டு, பின்னர் 1940-களில் இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் மிகப் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *