`2016 சட்டமன்ற தேர்தலிலிருந்து தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியாததால், 2026-ல் விஜய் அல்லது எடப்பாடி தலைமையை சீமான் ஏற்கப் போகிறார் என்ற பேச்சு நிலவுகிறதே..?”
“நாம் தமிழர் கட்சி இன்னொரு கட்சியின் தலைமையை ஏற்க வாய்ப்பில்லை. குறிப்பாக அ.தி.மு.க எங்களோடு கூட்டணி வைக்க விரும்பினாலும் தி.மு.க, அ.தி.மு.க-வோடு ஒருபோதும் கூட்டணியில்லை.”
“சூழலியல் பாதுகாப்புக்கு உதாரணமாக எப்போதும் கேரளாவை குறிப்பிடுவீர்கள், ஆனால் இந்த நிலச்சரிவுக்கு மனித தவறுகளும் மலை பகுதி ஆக்கிரமிப்புகளையுமே காரணமாக சொல்கிறார்களே ஆர்வலர்கள்..!”
“கேரளா அரசு நிர்வாக மற்றும் மனித தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை போல வளக் கொள்ளையோ.. இயற்கைக்கு எதிரான வேலைகளோ அங்கே நடக்கவில்லை. அப்படிபட்ட கேரளாவுக்கே இந்த நிலையென்றால் ஆக்கிரமிப்புகளும், வளக் கொள்ளைகளையும் தினம் தினம் சந்தித்துவரும் தமிழ்நாட்டின் மலை பகுதிகள் அபாய கட்டத்தில் இருக்கின்றன என்பதை புரிந்து, தமிழ்நாடு அரசு இதற்கு பிறகாவது விழித்து மணல், களிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பெரும்பான்மை எம்.பிக்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. எனவே மாநில அரசை மட்டும் குற்றம் சுமத்தும் அமித் ஷா, தேசிய பேரிடராக இதனை அறிவித்து உரிய நிதியை முதலில் வழங்கட்டும்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88