இறந்தவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கிய போலீஸ்… திகைத்த நிதிமன்றம்!| UP police registered an FIR based on a complaint from a person who had already been dead

அதாவது, பிரகாஷின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவரின் மனைவியின் சாட்சியம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 2011 டிசம்பர் 19-ம் தேதியே பிரகாஷ் இறந்துவிட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம், விசாரணையின்போது பிரகாஷ் உயிரோடிருப்பது போல காண்பிக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றம் கண்டுபிடித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்அலகாபாத் உயர் நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றம்

அதையடுத்து, இந்த வழக்கில் புருஷோத்தம் சிங்குக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்த உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் ஷியாம் ஷாம்ஷேரி, “இறந்த ஒருவர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது மட்டுமின்றி, விசாரணை அதிகாரி முன் தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்திருப்பது மிகவும் விசித்திரமானது. அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவையனைத்தையும் பார்க்கும்போது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆவியால் செய்யப்பட்டது போல தெரிகிறது” என்றார். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்துமாறு குஷிநகர் காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *