அப்போது நீதிபதிகள், “உயர் நீதிமன்றம் பொருத்தமற்ற பல விஷயங்களைப் பற்றி விவாதித்ததை காண்கிறோம். ஒரு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எழுதும் போது, நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த மாட்டார்கள். அப்படி அவர்கல் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதில்லை. ஏற்கெனவே, தீர்ப்புகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பது குறித்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ‘இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்கிக்கொள்ள வேண்டும்’ என கொல்கத்தா நீதிமன்றம் பிறத்த உத்தரவின் அந்தக் கருத்துகள் நீக்கப்படுகிறது. சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவுகள் 30 – 43 வரையிலான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 19 (6)-ன் விதிகளை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஐபிசி பிரிவு 363 (கடத்தல் தண்டனை) மற்றும் பிரிவு 366 (ஒரு பெண்ணைக் கடத்துதல், திருமணத்தை கட்டாயப்படுத்த தூண்டுதல் போன்றவை) போக்சோ சட்டத்தின் பிரிவு 6 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88