சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடந்த சில நாட்களாகப் பேசு பொருளாகியுள்ளது. இது கவனிக்கத்தக்க வகையில் தலைமை நீதிபதியின் உரையில் குறிப்பிட்ட மேற்கோள் அடங்கி இருந்தது.
அது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் செப்டிங் டேங் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளும் ரவிச்சந்திரன் பத்ரனின் ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் தான் அவர் மேற்கோள் காட்டி இருந்தார். யார் அந்த ரவிச்சந்திரன் பத்ரன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மேற்கோள் காட்டும் வகையில் அவரது ஆய்வுக்கட்டுரையில் இடம்பெற்றிருந்த சாரம்சம் என்ன என்பதை அறிய கோத்தகிரி பயணப்படுவோம்…
ரவிச்சந்திரன் பத்ரன் இஸ்லாத்தை தழுவி ரைஸ் முகமதுவாக உள்ளார். ஆனால் அப்பகுதி மக்களால் “செப்டிக் டேங்க் பாய்” என்று தான் அழைக்கப்படுகிறார். சிறுவயது முதலே தாய் தந்தையரின் துப்புரவு பணியை கண்டு வாழ்வின் வளர்ச்சி காண வேண்டுமெனத் தொடர்ந்து 36 ஆண்டுகள் பல்வேறு பகுதிகளிலும் கல்வி பயின்று ரவிச்சந்திரன் பத்ரன் கல்லூரிப் பேராசிரியர் ஆனார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சுயமரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செப்டிக் டேங்க் கிளீனிங் தொழிலையும் சுயமரியாதை இயக்கத்தையும் துவக்கி உள்ளார். முனைவர் பட்டதாரி ஆக இருப்பினும் அவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். இவர் தலித் கேமரா என்ற youtube பக்கத்தின் மூலமாகப் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளையும் பதிவிட்டு வருகிறார்.
இவர் எழுதிய The Many Omission of a Concept என்ற ஆய்வுக் கட்டுரையை உச்சநீதிமன்ற நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார் என்பது இவருக்குக் கிடைத்த, சுயமரியாதைக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுவதாகப் பெருமிதம் கொள்கிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.