உதயநிதிக்குத் துணை முதல்வர்: `பழுக்கவில்லை..!’ ஸ்டாலினின் சூசக பதிலுக்குப் பின்னால்?! | What was behind Chief Minister Stalin’s suggestive response in Deputy Chief Minister for Udayanidhi?

என்ன நடக்கிறது தி.மு.க-வில்?

உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என திமுக-வில் கோரிக்கை வலுப்பதாகச் சொல்லும் நிலையில் இன்னும் பழுக்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். “தேர்தலுக்கு முன்பாகவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. இது குறித்துக் கட்சியிலும் குடும்பத்திலும் பெரிதாகப் பேசப்பட்டது என்னவோ உண்மைதான். `தேர்தல் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என முதல்வர் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதன் தொடர்ச்சிதான் `அனைவரும் துணையாக இருக்கிறோம்’ என்று உதயநிதி பேசினார். இப்போது மீண்டும் அதே கோரிக்கை எழுந்ததும், அதை பூதாகரப்படுத்தியதும் குறிஞ்சி இல்ல வட்டாரங்கள்தான். உதயநிதிக்குப் பொறுப்பு வழங்குவது குறித்துக் குடும்பத்தில் இதுவரை இரண்டு முறை பெரிய அளவில் விவாதம் நடந்திருக்கிறது. இப்போது பொறுப்பு வழங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து முதல்வர், கட்சி சீனியர்கள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அதேசமயத்தில் உதயநிதி தரப்பு ஆட்கள் முதல்வர் தரப்பிடம், `துணை முதல்வர் பதவி கொடுப்பது சரியாக இருக்கும். அமைச்சர்களை முதல்வரிடமும், அதிகாரிகளைத் துணை முதல்வரிடமும் ரிப்போர்ட் செய்யச் சொல்லலாம். இதனால், முதல்வரின் பணி எளிதாகும்’ என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட முதல்வர், இதுவரை துணை முதல்வர் பொறுப்பு வழங்குவது குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை. அதனால்தான் பலமுனைகளிலிருந்தும் கோரிக்கை வருவது வலுத்திருக்கிறது… `முடிவெடுக்கப்படவில்லை’ என்பதை, `பழுக்கவில்லை’ என்று மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறார். இதில் முடிவு இறுதி செய்யப்படாததால், அமைச்சரவையில் சிறிய மாற்றமும் இதுவரை செய்யப்படாமல் இருக்கிறது” என்றார்கள் விரிவாக..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *