எச்சரிக்கை விடுத்த முதல்வர்… கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! – திகு திகு திமுக கூட்டம் | The CM Stalin has warned DMK District secretaries what happened in the meeting

கலக்கத்தில் மா.செ!

இடையில் முதல்வர் பேசும்போது, “இங்குள்ள சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கிறது. அதேபோல, நிர்வாகிகள் குறித்தும் தலைமை கழகத்துக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. அந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்படும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு அனைவர்க்கும் இருக்கும். நிர்வாகிகளை அரவணைத்துச் செல்பவர்களே மாவட்டச் செயலாளர்களாக இருப்பார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் கவுன்சிலர்கள் மீது பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பேசியிருந்தார். மேலும் முதல்வர் புகார் அதிகம் வந்த மாவட்டச் செயலாளர்களைக் கேள்வி எழுப்பி ஒழுங்காகச் செயல்படவேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்

திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு செயல்பாடுகள் குறித்துப் பேசினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “நீங்கள் மகிழ்ச்சியாக அமெரிக்காவுக்குச் சென்று திரும்புங்கள். கட்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று பேசியிருந்தார்.

கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்தும், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் எதுவும் பேசப்படவில்லை. அதேசமயத்தில், திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெறும் என்று பேசப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருப்பது பல மா.செ-களுக்கு கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *