ஆந்திர மாநிலம், விஜயநகரத்தைச் சேர்ந்த `யூடியூபர்’ ஹர்ஷா சாய். ஏழைகளுக்கு உதவி செய்வதைப்போல வெளியாகும் வீடியோக்களால் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படுகிறவர் ஹர்ஷா சாய். தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளிலும் யூடியூப் சேனல்களை நடத்திக்கொண்டிருக்கிறார். மில்லியன் கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் ஹர்ஷா சாயை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு காதும் கங்கன்னாடோரா என்ற நிலமற்ற ஏழை விவசாயிக்கு ஹர்ஷா சாய் ஒரு ஏக்கர் விளை நிலம் வாங்கி இலவசமாக கொடுத்ததைப்போன்ற வீடியோ வெளியாகியிருந்தது. நிலம் வழங்கிய ஹர்ஷா சாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பதைபோல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த வீடியோ “YouTuber Fans page’ என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் நேற்று பகிரப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவின் `கமெண்ட் செக்ஷன்’ பகுதியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் பெயரிலான அதிகாரப்பூர்வ சமூக வலைதள ஐ.டி-யில் இருந்தே `அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா’ என்று பதிவிடப்பட்டிருக்கிறது. இந்த ஐ.டி-யில் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கிறது. இதை கவனித்த பலரும் கிண்டலாக `ரிப்ளை’ செய்திருந்தனர். விமர்சனம் எழுந்த நிலையில், துரைமுருகன் தரப்பினர் இன்று காலையில்தான் இந்தப் பதிவையே கவனித்து நீக்கியிருக்கின்றனர். விசாரித்தபோது, அமைச்சர் துரைமுருகனுக்கே தெரியாமல், அவரின் சமூக வலைதள பக்கங்களைக் கவனிக்கும் `அட்மின்’ தரப்பில் இருந்து இதுபோன்ற கமென்ட் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88