யாருக்குச் சென்றது அதிமுக வாக்கு?!
இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்குச் சென்றது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம், “அதிமுக தேர்தலைப் புறக்கணித்ததிலிருந்தே அதிமுகவின் வாக்கை யார் வாங்குவது என்ற போட்டியே திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியிடையே நிலவியது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லும் நாம் தமிழர் கட்சி இந்தமுறை அதிமுக போட்டியிடவில்லை. அந்த வாக்குகளை எங்களுக்குச் செலுத்துங்கள் என்று சொல்லி வாக்கு கேட்டார் சீமான். பாமக தேர்தல் மேடைகளிலும், பிரசாரத்திலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்களை வைத்து வாக்கு சேகரித்து பாமக. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் வேட்பாளர் வி.சி.க வேட்பாளர் பெற்ற வாக்குகள் 72,188, இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். பாமக வேட்பாளர் 32,198 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க 32,198 வாக்குகளைப் பெற்றது. அதிமுகவின் 65 ஆயிரம் வாக்குகள்தான் அனைவரின் குறியாக இருந்தது. 2021-ம் ஆண்டு தேர்தலை எடுத்துக்கொண்டால், பாமக கடந்த தேர்தலை விட 24 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றன.
நாம் தமிழர் கட்சி கூட கடந்த தேர்தலை விட அதிக வாக்குக்குள்தான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் கடந்த முறை அதிமுகவுக்குச் சென்ற வாக்குகள் தற்போது பெருமளவில் சிதறியிருக்கிறது. அதேநேரத்தில், இதற்கு முன்பாக நடைபெற்ற இடைத்தேர்தலை எல்லாம் கணக்கில் கொண்டால், ஒரு பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எப்போதுமே ஆளும் கட்சிக்குச் சாதமாகவே பெரும்பாலான நேரங்களிலிருந்திருக்கிறது. 2019-ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அன்றைய ஆளும் அதிமுகவுக்குச் சாதகமாகவே இருந்ததை மறந்துவிட முடியாது. அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் கூட அதிமுக போட்டியிட்டிருந்தபோதிலும் ஆளும் திமுக அரசின் கூட்டணியின் சார்பில் போட்டியிட வேட்பாளர் வெற்றிபெற்றதை நாம் பார்த்தோம். ஒரு இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக் கடந்தகால தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு யாருக்குச் சென்றது என்று சொல்வது சரியாக இருக்காது. பொதுத் தேர்தல் களம் என்பது வேறு… இடைத்தேர்தல் களம் என்பது முற்றிலும் வேறு…” என்றார்கள் விரிவாக!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88