கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால், திமுக-வுக்கு எதிராக பேசுகின்ற எதிர்கட்சியினரை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை பார்க்கிறோம். எதிராக பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களைப் பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய் திறந்தால் கைது பண்ணுவோம் என மிரட்டினால் தமிழ்நாட்டில் யாரும் பயப்பட மாட்டார்கள்.
ஆர்.எஸ்.பாரதி, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போட வேண்டும், அதை விட்டுவிட்டு திமுகவை பற்றி பேசினால் வன்கொடுமை சட்டப்பிரிவில் கைது செய்வோம் என பேசுகிறார்கள்.
பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்.
சசிகலாவின் அதிமுக இணையும் என்ற கருத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88