கள்ளர் பள்ளிகள் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக; மறுக்கும் திமுக – பரபரக்கும் மதுரை மண்டலம்! | Admk protest against DMK government in kallar school issue

இதற்கு அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதல் படியாக இணை இயக்குநரின் தனித்துவமான கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு விடுதிகளை கள்ளர் சீரமைப்புத் துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதன் அதிகாரத்தை மழுங்கடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட விடியா அரசின் அரசாணை 40/2022– ஐ கைவிட வலியுறுத்தியும் 24 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்த நிலையில், திமுக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக போராட்ட அறிவிப்புஅதிமுக போராட்ட அறிவிப்பு

அதிமுக போராட்ட அறிவிப்பு

அதிமுக-வுடன் அனைத்து சமுதாய அமைப்புகளும், தோழமைக் கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டமாக வலுப்பெறும் என்பதை உளவுத்துறை முலம் அறிந்ததால் வழக்கம்போல மாற்றி மாற்றிப் பேசி தன் நிர்வாக குளறுபடிகளை மறைக்க முயலும் திமுக அரசின் வித்தைகள் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. நாணய வெளியீட்டு விழாவை ‘மத்திய அரசு நடத்தியது’ என்று பச்சைப்பொய் பேசிவிட்டு, பொய் அம்பலப்பட்டுவிட்டதும் ‘மத்திய அரசு கட்டுப்பாட்டில் நிகழ்ச்சியை மாநில அரசு தான் நடத்தியது’ என மாற்றிப் பேசி சமாளிக்க முயன்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு வெளியிடும் வெற்று அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களும் அதிமுக-வும் நம்புவதாக இல்லை. விடியா திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளால் அச்சத்தில் உள்ளதாக கள்ளர் சமுதாய அமைப்பினரும் மக்களும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முறையிட்டதன் அடிப்படையிலேயே, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயங்களுள் ஒன்றான பிரமலைக் கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமாகத் திகழும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க விடியா திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் வரை அதிமுக-வின் போராட்டம் நிச்சயம் தொடரும்” என்று தெரிவித்துள்ளனர். இன்று அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *