‘நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை, தமிழ்நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் கணிசமான ஸ்வீட் பாக்ஸுகளை இறக்கியிருக்கிறோம். எனவே, இழந்த மாண்புமிகு பதவி மீண்டும் நமக்கே கிடைத்துவிடும்’ என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தாராம் அந்த மாஜி. ஆனால், சென்னையில் சமீபத்தில் நடந்த தேசியக் கட்சித் தலைவர் கொலையோடு தொடர்புடைய கூலிப்படையினர் மற்றும் அவர்களின் உறவினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே அந்த மாஜி எடுத்துக்கொண்ட புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியாகி, சூழலையே மாற்றிப்போட்டுவிட்டது. புகைப்பட விவகாரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், “கொலைக்கும் ஆளும் தரப்புக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்” எனக் களமாடத் தொடங்கிவிட்டன. இதனால், அதிர்ந்துபோன மாஜி, ‘எங்கே தன்னுடைய மாண்புமிகு கனவுக்கும் பாதகம் வந்துவிடுமோ…’ என்ற பயத்தில் இருக்கிறாராம். “அண்ணனின் ஆசையில் இப்படி மண்ணள்ளிப் போட்டுட்டாங்களே…” என்று புலம்புகிறார்கள் விழுதுகள்.
Related Posts
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது… அதிரடி காட்டிய காவல்துறை!
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை. பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து…
`கனிம வள நிலங்கள்… வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் ம்| supreme court upholds state governments power to tax on minerals
தலைமை நீதிபதி சந்திரசூட் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அந்தத் தீர்ப்பில், ‘உரிமத்தொகை என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால் குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான…
18 Darbar | ஆத்தோரமாக வந்த அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினர்… | Amazon Forest | Tribes | N18S
18 Darbar | ஆத்தோரமாக வந்த அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினர்… | Amazon Forest | Tribes | N18Sசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின்…