காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டமும்… 3 முக்கிய தீர்மானங்களும்! | 3 resolutions took about cauvery water dispute in TN Assembly all party meeting

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்.

 முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்த முதல்வர் ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டம்காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் – அனைத்துக் கட்சி கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *