குண்டர் தடுப்புச் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி, செல்வராஜ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் உதவியுடன் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால் குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க:
Magalir Urimai Thogai | மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறதா? – உண்மை என்ன?
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம் என்றும் கூறி, செல்வராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதுபோல குண்டர் தடுப்புச் சட்டத்தை சாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் தெரிவித்தனர். விதிகளை மீறி ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும், அது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
.