ஆம் ஆத்மி கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் அதனை தொடர்ந்து உடனே நடந்த சங்ரூர் தொகுதிக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துவிட்டது. இத்தொகுதியில் பஞ்சாப் முதல்வர் மான் வெற்றி பெற்று இருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தங்களது செல்வாக்கை நிரூபித்துக்காட்ட வேண்டிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. காங்கிரஸ் கடந்த மக்களவை தேர்தலில் இங்கு 8 தொகுதியில் வெற்றி பெற்று 41 சதவீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான அகாலிதளம் கட்சிகள் இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். எந்த ஒரு கட்சியையும் அவர்கள் முழுமையாக நம்பவில்லை என்பது கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நடந்த தேர்தல் முடிவுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். மதப் பிரச்னையை எழுப்பி பஞ்சாப்பில் ஓட்டுக்கேட்க முடியாது. பஞ்சாப்பில் சாதிப் பிரச்னையைக்கூட எழுப்ப முடியாது. பஞ்சாப்பில் பிரதானமாக இருப்பது விவசாயிகள் பிரச்னை மட்டுமே. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை டெல்லிக்குள் வரவிடாமல் எல்லையில் தடுத்து நிறுத்தியது விவசாயிகள் நெஞ்சில் ஆறாத புண்ணாக இருக்கிறது.
இதனால் பா.ஜ.க வேட்பாளர்களைக்கூட பஞ்சாப் மக்கள் தங்களது கிராமத்திற்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் பா.ஜ.க இத்தேர்தலில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வெற்றி பெறுவது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியது. அப்போது கூட பா.ஜ.கவால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ.கவோடு சேர்ந்த காரணத்தால் அகாலி தளம் மீதும் மக்கள் கோபத்தில்தான் இருக்கின்றனர். அதனால் இப்போது பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிகள் கட்சிகள் இடையேதான் பிரதான போட்டியாக பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88