`கெஜ்ரிவால் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஊழலில் சிறைக்குச் செல்வார்!’- செல்லூர் ராஜூ | Stalin will go to jail like kejriwal says sellur raju

மதுபானக் கொள்முதலில் அரசு வெளிப்படைத் தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது, மதுபான ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார்.

மு.க.ஸ்டாலின்மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம், பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே? கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும், நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா? சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும், திமுக ஆட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள்.

திமுக ஆட்சியில் சட்டங்கள் எழுத்துக்களாகவே மட்டும் உள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *