கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை விவகாரம்: `அரசியல்’ கடந்து நீதி கிடைக்குமா?! |Kolkata female doctor rape and murder: Can justice be achieved beyond “politics”?

அதேசமயம், `தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்த கோர சம்பவத்தைக் கண்டித்து மம்தா பேரணி நடத்துவது வேடிக்கை” எனவும் எதிர்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. அதேசமயம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் கொலையில், மருத்துவமனையின் இதர டாக்டர்களுக்கும், உடன் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களை விசாரிக்கவேண்டும் என பெண்ணின் பெற்றோர்களும் மருத்துவ சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், மற்ற மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருக்கிறது.

இந்தநிலையில், இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர்(IMA) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர நாடுதழுவிய பணி புறக்கணிப்பு போராட்டத்தை இன்று(17-08-2024) தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த வழக்கை விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், மகளை இழந்த குடும்பத்துக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கவேண்டும், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி வேலைசெய்யும் ரெசிடென்ட் டாக்டர்களின் வாழ்விடங்களை மிகுந்த பாதுகாப்புடன் மேம்படுத்தவேண்டும், விமான நிலையங்களில் இருப்பதைப்போல முக்கியமான மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

இத்தனை போராட்டங்கள், அரசியல் குற்றச்சட்டுகள் எல்லாம் கடந்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும், இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *