ஏழாம் அறிவு படத்தில் வருவது போல் நோய்வாய்ப்பட்டவர்களை காட்டுப்பகுதியில் அழைத்துச் சென்று விட்டு விடுவார்கள் அதே போலத்தான் கொல்லிமலையில் ஒரு வழக்கம் உள்ளது.
தீர்க்க முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கொல்லிமலை மக்கள் சீக்குப்பாறை என்னும் மலைப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள் அந்த சீக்குப்பாறையின் உஷ்ணத்தினால் நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடைந்தால் மீண்டும் வீடு திரும்புவார்கள் இல்லையென்றால் அவர்கள் அங்கேயே இறந்து விடுவார்கள் இந்த வழக்கம் கொல்லிமலையின் காலம் காலமாக இருந்து வந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமில்லாமல் பெண் குழந்தைகளை கடவுள்களுக்கு பலி கொடுக்கும் வழக்கமும் கொல்லிமலையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம் இந்த மாதிரியான விஷயங்கள் நாம் படங்களில் பார்த்திருப்போம் ஆனால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இப்படி ஒரு வினோதமான பரிகாரம் கொல்லிமலையில் காலம் காலமாக நடந்திருக்கிறது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஆங்கிலேயர் காலத்தில் ஜெசிமென் பிராண்டு மற்றும் அவரது மனைவி ஈவ்லின் பிராண்டு ஆகியோர் மலைவாழ்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மர பங்களா அமைத்து மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களை செய்தனர். அந்த மரவீடு இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மக்களை காப்பாற்றிய போதிதர்மர் அதாவது ஜெசிமெண்ட் பிராண்ட் அவர்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திற்கு 1909ஆம் ஆண்டு மருத்துவ பயிற்சி பெற்ற ஜெசிமென் பிராண்டு என்ற ஆங்கிலேர் தனது 24ஆம் வயதில் வந்தார். அங்கே ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்தார். அங்கு நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்யத் தொடங்கினார். நூறு வருடங்களுக்கு முன்பு கொள்ளை நோயான காலரா மற்றும் ப்ளேக்கால் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் உயிழந்தனர். அபோது அவர்களுக்கு ஜெசிமென் பிராண்டு மருத்துவ உதவிகள் புரிந்து காப்பாற்றினார். கொல்லிமலையில் வசிக்கும் மக்கள், தங்கள் காட்டு பகுதியில் விளையும் பழங்களை விற்பனை செய்வதற்கா மலைப்பாதையின் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சேந்தமங்கலம் பகுதிக்கு வருவார்கள். அவர்களுக்கும் மருத்தவ உதவிகளை செய்யவேண்டும் என்று ஜெசிமென்பிராண்டு விரும்பினார்.
இதையும் வாசிக்க: TOURIST GUIDE : ஆன்லைனால் வாழ்வாதாரம் போச்சு – குமுறும் டூரிஸ்ட் கைடுகள்…
1912ஆம் ஆண்டு ஜெசிமென் மற்றும் அவரது நண்பர் மார்லிங் என்பவருடன் கொல்லிமலையில் உள்ள வாழவந்தி என்ற இடத்திற்கு மலை மீது நடந்து சென்றார்கள். அங்கிருந்து ஓலைக்குடிசையில் தங்கி, மலை கிராமங் மக்களுக்கு சிகிச்சை அளித்தார். அங்கே ஒரு மர பங்களாவையும் கட்டத் தொடங்கினார். 1919ஆம் ஆண்டு, கொல்லிமலை பகுதகளில் விஷக்காய்ச்சல் பரவியது. விஷக்காய்ச்சளால் பாதிக்கப்பட்ட மக்களை மலைமேலுள்ள பாறையில் போட்டு வந்து விடுவார்களாம். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களாம். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை என்று இன்றளவும் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து ஜெசிமென் காப்பாற்றினார்.
கொல்லிமலை பகுதியில் நடந்த குழந்தை திருமண முறைக்கு எதிராகவும் போடினார். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட, சிறுமிகளையும் குடும்பத்திற்கு சாபமாக விளங்கும் பெண் குழந்தைகளையும் ஜெசிமென்-ஈவ்லி தம்பதியினர் பாதுகாத்து வளர்த்தனர். அவ்வாறு பாதிப்புக்கு உள்ளான சிறுமிகளுக்கும், நோய்பாதித்த குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்து விடுதியி அமைத்து பராமரித்தனர். இந்த மாதிரி நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 23 குழந்தைகளை உணவு வழங்கி அவர்களுக்கு கல்வி அறிவும், தோட்டக்கலை, பாய் முடைதல், நெசவு, பட்டுபூச்சி வளர்ப்பு, தச்சு போன்றவைகளும் கற்றுதரபட்டன.
அப்பகுதி மக்களின் விவசாய முன்னேற்றத்திற்கும் துணைபுரிந்தார். கொல்லிமலையின் பல பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தவும் துணைபுரிந்தார். இந்நிலையில் ஜெசிமென் பிராண்டு கறுப்பு நீர் காய்ச்சல் என்னும் வினோத நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி, 1929ஆம் ஆண்டு தனது 44ஆவது வயதில் கொல்லிமலையிலேயே உயிரிழந்தார். 17 ஆண்டுகள் கொல்லிமலையிலேய வாழ்ந்த அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
ஜெசிமென் பிராண்டு வாழ்ந்த மரத்தால் ஆன பங்களாவை இன்றும் பார்க்கலாம். அங்கே அவர்கள் பயன்படுத்திய கட்டில், சமையலறை மற்றும் பிற பொருட்களையும் பார்க்க முடியும். கொல்லிமலை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிய ஜெசிமென் பிராண்டுடின் நினைவுகளை சொல்லும் பல்வேறு அடையாளங்கள் இன்றும் இருக்கின்றன. அந்த வகையில் மர பங்களாவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அந்த மர பங்களாவை சுற்றி அவர்கள் காப்பாற்றி வளர்த்த 23 குழந்தைகளின் குடும்பங்கள் தற்போது ஒரு ஊராகவே மாறி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.