சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், தகைசால் தமிழர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வழங்க உள்ளார்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்ற உள்ளார். தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகளை வழங்கி பாராட்ட உள்ளார். விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் பார்வையிட தனித்தனி மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read :
இந்தியாவிற்கு சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15-ஐ தேர்வு செய்ய காரணம் என்ன தெரியுமா?
சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விளைவாக, மாநிலம் முழுவதும் தமிழக காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனையிட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
.