கோவை சாக்கடைக்குழியில் பெண் விழுந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு அபராதம்… அதிகாரிக்கு நோட்டீஸ்!

கோவை காந்திபுரம் 100 அடி சாலையின், இரு புறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது.  சாக்கடை மூடிகள் மிகவும் சேதமடைந்திருந்ததால் புதிய மூடிகள் பொறுத்த முடிவு செய்திருந்தனர்.

மூடப்பாத சாக்கடை குழி

இதன்காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சாக்கடை குழிகள் மூடப்படாமல் இருந்துள்ளன.  இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பகுதி மக்களும், வணிக நிறுவனங்களும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.  இதனிடையே நேற்று முன்தினம், ஒரு பெண் மூடப்படாமல் இருந்த குழிக்குள் தவறி விழுந்தார்.

குழியை மூடும் பணி

அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் பாதாள சாக்கடையை மூடினார்கள். “ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா. ஒருவாரமாக ஏன் நடவடிக்கை இல்லை?” என மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

மூடப்பட்ட பாதாள சாக்கடை

இந்நிலையில், அந்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *