சட்டமன்றத்தில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்..!" – உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டிஸை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, உரிமை மீறல் நோட்டிஸை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

உயர் நீதிமன்றம்

அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி, “ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும், அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன. தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது, உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனப் பல்வேறு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

இந்த வழக்கு தொடர்பான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். அதில், “தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும். மேலும், உரிமை மீறல் நோட்டீஸுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் உரிமை குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும். உரிமைக்குழு சட்டமன்ற விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *