“சர்வாதிகாரம்… எடப்பாடி கட்சியை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டார்..!” – ஓ.பி.எஸ் தாக்கு | Ops press meet at karaikudi regarding admk and bjp

“ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் தோல்வியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு…

“என்னைப் பொறுத்தவரை அங்கீகரிப்பட்ட சின்னமில்லாத, கொடி, பேனரில்லாத பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ராமநாதபுரம் மக்கள் 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளார்கள். என்னை தோற்கடிப்பதற்கு நடந்த சூழ்ச்சி, சதி அனைத்தும் தோற்றுப்போய் அவர்களுக்கு டெபாசிட் போனது. இந்த தீர்ப்பின் மூலம்தான் அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் தொண்டர்களின் உரிமைக்கான எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபணமாக்கியது”” என்றார்.

” அதிமுகவை ஒன்று சேர்க்கும் உங்கள் முயற்சி எப்படி உள்ளது?” என்ற கேள்விக்கு…

“இந்த நிமிடம் வரை முயற்சித்து வருகிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இன்னுயிரைத் தந்து உருவாக்கி பல வெற்றிகளை தந்த கழகத்தை காப்பற்றுகின்ற அளவுக்கு இன்று அதிமுக இல்லை. இது எதனால் யாரால் உருவானது, சர்வாதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அதள பாதாளத்திற்கு தள்ளி, தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை செய்துள்ளார்.  இதற்கு முடிவு கட்டவேண்டிய பொறுப்பு அதிமுக தொண்டர்களின் கையில் உள்ளது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *