சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35,000 அபராதம்! – தீர்ப்பும் வழக்கின் பின்னணியும் | Villupuram consumer court has took action by imposing a fine rs.35,000 on the hotel for not putting pickle

தொடர்ந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு  கொடுத்துவிட்டேன். அதனால் அந்த ஊறுகாய்க்கான ரூ.25-ஐ திரும்பத் தருமாறு கேட்டிருக்கிறார் ஆரோக்கியசாமி. ஆனால் அதனை தருவதற்கு மறுத்திருக்கிறார் ஹோட்டல் உரிமையாளர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான அரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்து வந்த ஆணையம், நேற்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், `ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு.

விழுப்புரம்விழுப்புரம்

விழுப்புரம்

இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.30,000-ம், வழக்கு செலவுக்காக ரூ.5,000-ம், 25 ஊறுகாய் பொட்டலங்களுக்காக ரூ.25-ம், சாப்பாடு பார்சலுக்கான உண்மையான ரசீதும் கொடுக்க வேண்டும். மேலும் இந்த தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் ஹோட்டல் உரிமையாளர் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9% வட்டியுடன் அந்தத் தொகையை  செலுத்த வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கின் மனுதாரரான ஆரோக்கியசாமி, அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கம் என்ற அமைப்பின் மாநில தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *