கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு,
சுவர் இடிந்து விழுந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு 5 லட்சம் தர இயலாதா என உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அதிபதி. இவர் தனது 11 வயது மகள் சரண்யா, 2014ஆம் ஆண்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தால் 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், சிறுமி உயிரிழப்புக்கு காரணமான சுவர் கட்டிக் கொடுத்தது அரசு தான் எனவும் எனவே 5 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தடை கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கோபமடைந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய, கூச்சமாக இல்லையா என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை…” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் வழங்கும் அரசு, சிறுமி உயிரிழப்புக்கு 5 லட்ச ரூபாய் தர இயலாதா என கேள்வி எழுப்பினர்.
மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த தொடர்புடைய அரசு துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்தது.
.
- First Published :