“நில மோசடி வழக்கு விசாரணை தீவிரமடைந்தபோதே தலைமையின் உதவியை நாடினார் விஜயபாஸ்கர்” எனப் பேசத் தொடங்கினார் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சீனியர் நிர்வாகி ஒருவர். “அப்போதும் அவர் தலைமறைவாகவே இருந்தார். அப்போது தலைமையின் உதவியை நாட, அவர்களோ, ‘இந்த வழக்கில் ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது. இதில் தலையிட்டால், மொத்த கட்சிக்கே கெட்ட பெயர் ஆகிவிடும்’ என்று கைவிரித்துவிட்டது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த விஜயபாஸ்கருக்கு அவரின் பக்கத்து மாவட்ட மாஜி ஒருவர் அடைக்கலம் கொடுக்க, முன்னாள் மணி மாஜி ஒருவர் ஆளுந்தரப்பின் மேலிடத்தில் மீண்டும் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், அங்கிருந்து சரியான பதில் வரவில்லையென்பதால் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இந்தச் சூழலில்தான் அவர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது போராட்டம் நடத்தியது, கண்டன அறிக்கை வெளியிட்டது எனத் தீவிரம் காட்டிய கட்சித் தலைமை, தன்னைக் கைது செய்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் பெயரளவுக்கு கண்டனத்தை மட்டும் பதிவு செய்திருப்பது விஜயபாஸ்கர் தரப்பை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.” என்றவர்கள்.
இந்த விவகாரத்தில் தலைமை எந்த உதவியும் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, சட்டரீதியாக இதை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கிறோம். எனவே, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்” என முடித்துக்கொண்டனர்.
வழக்கு, வலுவான ஆதாரங்களோடு நகர்வதாலேயே, நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மீண்டும் மீண்டும் மறுத்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை தலையிட்டால், கட்சிக்கு தான் கெட்டப்பெயர் என ஒதுங்கியே நிற்கிறதாம் தலைமை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88