சுதந்திர தின விழாவை ஒட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே வரும் 13, 18ஆம் தேதிகளில் இரவு 10.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கு ஆகஸ்ட் 14, 19ஆம் தேதிகளில் மாலை 5.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் செல்லும்.
இதேபோல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 18, 25-ஆம் தேதிகளில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோன்று தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆகஸ்ட் 19, 26ஆம் தேதிகளில் பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
.
- First Published :