`செங்கோல் வேண்டாம்… அரசியல் சாசனம் வேண்டும்!’ – சமாஜ்வாதி கடிதம்… நிராகரித்த சபாநாயகர்! | replace sengol by indian constitution in lok sabha, Samajwadi request to om birla

பின்னர், தனது கட்சி எம்.பி-யின் கருத்து குறித்து பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “செங்கோல் நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்குத் தலைவணங்கினார். ஆனால், இந்த முறை பதவிப்பிரமாணம் செய்யும்போது அதற்கு அவர் தலைவணங்க மறந்துவிட்டார். அதனால், எங்கள் எம்.பி பிரதமருக்கு அதை நினைவூட்ட விரும்பினார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

அகிலேஷ் யாதவ்அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இவரைத்தொடர்ந்து, சமாஜ்வாதி எம்.பி-யின் கோரிக்கையை ஆதரித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “செங்கோல் என்பது மன்னராட்சியைக் குறிக்கிறது. அந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எனவே, மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நாம் கொண்டாட வேண்டும்” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்தார். அதேபோல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி-யும் லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பார்தியும், இந்த கோரிக்கையை யார் வைத்திருந்தாலும் அதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், பா.ஜ.க தரப்பிலிருந்து இதற்கு எதிர்வினையாற்றிய அதன் செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இந்தியா மற்றும் தமிழ் கலாசாரத்தை சமாஜ்வாதி அவமத்துவிட்டது என்றும், இந்த செங்கோல் அவமதிப்பை தி.மு.க ஆதரிக்கிறதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் விமர்சித்து கேள்வியெழுப்பினார். இப்படியாக இந்த விவகாரம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி விவாதமாக மாற, சபாநாயகர் ஓம் பிர்லா இது எதையும் பொருட்படுத்தாமல், சமாஜ்வாதி எம்.பி-யின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதனிடையே உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அவர். “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. “செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *