“செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – மத்திய அமைச்சரிடம் சென்னை உயர் நீதிமன்றம் | madras court gave 10 days time to shobha karandlaje for ask sorry in rameshwaram cafe blast issue

பின்னர், இந்த மனுமீது நடைபெற்ற உயர் நீதிமன்ற விசாரணையில், ஷோபா கரந்த்லாஜே, `செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா?’ என்பதற்கு விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறிருக்க, இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ். ராமன், `செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்’ என்றும், `தமிழ் மக்கள் மீது மரியாதையை இருக்கிறது. இனி இவ்வாறு கூற மாட்டேன் என அவர் உறுதியளிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

அதற்கு ஷோபா கரந்த்லாஜே தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்வதாகக் கூறினார். இதனை மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், `செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கும்போது, அதேபோல செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கோரினால்தான் சரியாக இருக்கும். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடிமட்டத்தில் இருப்பவர்கள் இவரின் கருத தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்” என்று கூறி, ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். மேலும், அதற்குள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்குமாறு நீதிபதி கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *