`தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே…’ – இலங்கை கடற்படை சிறைபிடிப்பு விவகாரத்தில் உயர் நீதிமன்றம்! | madras high court madurai branch on srilankan navy issue

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜுன் இரண்டாம் வாரத்தில் கோட்டைபட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அடுத்து ஜுன் 23-ம் தேதி 22 மீனவர்களையும், கடந்த ஜூலை முதல் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *