இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மீன்வர்களின் கைது ஆழ்ந்த வேதனையை தருவதாக குறிப்பிட்டுள்ள அவர், கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும் நம்பிக்கையற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி? – விசிக தலைவர் திருமாவளவன் சொன்ன பதில்
அண்மையில் இரு மீனவர்கள் இறந்தது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு எம்.பி.க்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் சந்தித்த நிலையிலும் எவ்வித நிவாரணமோ, தீர்வோ கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் அக்கடிதத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
.