தூத்துக்குடி: கிராம சபைக் கூட்டத்தில் கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளிக்க வந்த கல்லூரி மாணவி | A college student in Kattabomman getup to give a petition in the village council meeting in Thoothukudi

திடீரென கட்டபொம்மன் வேடமணிந்து வந்தபோது அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.  இதுகுறித்து அந்த மாணவியிடம் பேசினோம்,  ”மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்களில் பல குடும்பங்களின் குடியிருப்பு மனைகளுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.  

கிராமசபைக் கூட்டம்கிராமசபைக் கூட்டம்

கிராமசபைக் கூட்டம்

இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பலனுமில்லை.   ஏனென்றால்  இந்த ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என, தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆணையை ரத்து செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் என, பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடமணிந்து மனு அளித்துள்ளேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *