மேலும் கருங்குளம், செய்துங்கநல்லூர் போன்ற ஊர்களில் வசிக்கும் பலர் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைக்குச் செல்கின்றனர். இப்படி தூத்துக்குடிக்கு வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை வசவப்பபுர பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு தூத்துக்குடி பேருந்தில் ஏறிசெல்வர். ஆனால் தூத்துக்குடி செல்லும் பெரும்பாலான பேருந்துகள் வசவப்பபுர பேருந்து நிலையத்தில் நிற்பதில்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், “எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது முதல் அவசர உதவிக்கு மருத்துவமனைக்குச் செல்வது வரை அரசின் பேருந்து சேவையே எங்களுக்கு இன்றியமையதாக இருக்கிறது. நாங்கள் இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளுக்கு மனு கொடுத்துவிட்டோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றனர்.
இது தொடர்பாக பஸ் டிப்போவில் விசாரித்த போது, அங்குள்ள அதிகாரிகள், “வசவப்பபுரம், அனவரதநல்லூர் ,ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கு ஒரு பேருந்து மட்டும்தான் இந்த பஸ் டிப்போவில் உள்ளது. அதுவும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்றவாறு தான் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதல் பேருந்துகள் வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தன் மனு கொடுக்க வேண்டும்” என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்த போது அவர்கள் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பேருந்துகளை அதிகமாக இயக்கவும், தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் வசவப்பபுரப் பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88