நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார் என ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் சிலர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினாரா பேரூராட்சி தலைவர்?- குற்றச்சாட்டும் விளக்கமும்! | allegation against jegathala dmk chairman and her clarification
