தென்காசி மாவட்டத்தில், ஊழல் முறைகேட்டின் பேரில், ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட ஊர் ஆவுடையானூர். இந்த ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த குத்தாலிங்கராஜன் பணியாற்றி வந்தார். பதவியேற்ற நாள் முதல் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் முறைகேடுகள் சேர்மன் குத்தாலிங்கராஜன் மீது அடுக்கடுக்காக குவியத்தொடங்கின. ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழல் போக்கை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்களும், தன்னார்வலர்களும் புகார் மனு அளித்தனர்.
தென்காசி: ஊழல் புகாரின்பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் தகுதி நீக்கம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு! | Tenkasi aavudaiyanoor union chairman disqualified
