நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவநாதனின் நிதி நிறுவன அலுவலகத்திற்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள “மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்” என்ற நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் இருந்துவந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தில் 525 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து தேவநாதன், நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
இந்த நிலையில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதனின் வீடு உள்ளிட்ட 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, மயிலாப்பூரில் உள்ள தேவநாதனின் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்திய காவலர்கள், முக்கிய ஆவணங்கள், 4 லட்சம் ரொக்கம், கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மயிலாப்பூர் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தேவநாதன் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
.
- First Published :