`தொழில் வரி, உரிமை கட்டணம் அதிரடி உயர்வு; மேயரின் அமெரிக்க பயண செலவு’ – சென்னை மாமன்ற கூட்ட ஹைலைட்ஸ் | Commercial tax, license fee, cow-penalty increases’-Chennai Corporation decisions

அதேபோல, சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கும் நோக்கில், வருவாய்த்துறை தொழில்வரிக்கான விகிதம் அரையாண்டிற்கு 35% வரை உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.315-லிருந்து ரூ.430 ஆகவும், ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.690-லிருந்து ரூ.930 ஆக வரியை உயர்த்திட சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம், ரூ.60,001 முதல் ரூ.75,000 மற்றும் ரூ.75,001 அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் யாருக்குமே தொழில்வரி உயர்த்தப்படவில்லை. எனவே இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

மாமன்றக் கூட்டம் மாமன்றக் கூட்டம்

மாமன்றக் கூட்டம்

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை சென்னை மாநகராட்சி பன்மடங்கு அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, மிக சிறிய வணிகம்(Micro), சிறிய வணிகம்(Small), நடுத்தர வணிகம்(Medium), பெரிய வணிகம்(large) ஆகிய வணிக தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மிகச் சிறிய வணிக நிறுவனத்துக்கு ரூ.500 ஆக இருந்த தொழில் உரிம கட்டணமானது ரூ.3,500 ஆகவும், சிறிய வணிகத்துக்கு ரூ.7,000 ஆகவும், நடுத்தர வணிகத்துக்கு ரூ.10,000 ஆகவும், பெரிய வணிகத்துக்கு ரூ.15,000 என்ற அளவிலும் பன்மடங்காக தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், சென்னையில் இதுவரை சில நூறுகளில் இருந்த தொழில் உரிமக் கட்டணம் தற்போது பல ஆயிரங்களில் உயர்த்தப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *