கடந்த 24-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் `கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் `அசாத்தியமான சீனியர்களை சாதுர்யமாக கையாள்கிற ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப் டு யூ’ என தனக்கே உரித்தான பாணியில் பேசி, அரங்கையே கலகலப்பாக்கினார். அவர் பேசும்போது, மூத்த அமைச்சர் துரைமுருகன் பெயரைக் குறிப்பிட்டு `கலைஞர் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டியவர்’ என்று தனது அனுபவங்களையும் `நச்’ என்று பகிர்ந்தார்.
ரஜினியின் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன், நேற்று காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “வயசாகிப்போய், பல் விழுந்த பிறகும் நடிப்பதில்லையா?!’’ என விமர்சித்தார்.
இதையடுத்து, இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய ரஜினிகாந்த் “துரைமுருகன் எனக்கு நீண்டகால நண்பர். அவர் என்னச் சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது’’ என்றார்.