“நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவார்..!” – சொல்கிறார் மகிளா காங்கிரஸ் தலைவர் |Actor Vijay soonly adjoining with congress says mahila Congress president

தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் மற்றும் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று முடிவடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹசீனா சையத் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில், இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பில் இருக்கும்போது நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் நல்ல இணக்கத்தில் இருந்தார். தற்போது அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்குள் வருவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சி மீது நடிகர் விஜய்க்கு பற்று உள்ளது. ஆகவே விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *