சென்னை கோட்டூர்புரத்தில் நம்ம சென்னை என்ற தலைப்பில் சென்னையை கொண்டாடுவோம் என்பதன் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி இணைந்து நடத்தும் போட்டிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. ஓவியப்போட்டிக்கு சென்னை 2050, நான் விரும்பும் சென்னை மற்றும் நானும் சென்னையும் என மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டன.
இதேபோல் பிற்பகல் 3:00 மணிக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது. பேச்சுப்போட்டிக்கு நான் வியந்த சென்னை, சென்னையும் வாழ்க்கை முறையும் மற்றும் வாழ்வளிக்கும் சென்னை என்ற மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு ரீல்ஸ் போட்டியும், புகைப்படம் எடுக்கும் போட்டியும் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் aclreaders@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ரீல்ஸ் -ஐஅனுப்ப வேண்டும்.
.
- First Published :